பிரபாலினி பிரபாகரன்.(ஈழத்து மெல்லிசை குயில்)

இலங்கையின் முதல் பெண் இசையமைப்பாளர், மற்றும் தொழில் அதிபர். இவர் இப்பொழுது அமெரிக்காவில் வசிக்கிறார்.ஈழத்து மெல்லிசை மன்னர் எம்.பி. பரமேஷ் மற்றும் சங்கீத பூஷனம் மாலினி பரமேஷ் அவர்களின் மூத்த புதல்வி.

இலங்கை மண்ணின் இசை மணம் கமழும் இனிய குடூம்பம் அது. அப்பா திரு. எம்.பி. பரமேஷ், ஈழத்து மெல்லிசை மன்னர். இலங்கையில் முதல் இசைத்தட்டினை வெளியிட்ட தமிழர். அம்மா சங்கீத பூஷணம் திருமதி. மாலினி பரமேஷ் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழத்தில் இசையில் பட்டம் பெற்றவர். அம்மாவின் தகப்பனார் சங்கீத பூஷணம் திரு நமச்சிவாயம் அவர்கள். ஈழத்து மெல்லிசை மன்னர் எம்.பி. பரமேஷ் அவர்களின் தகப்பனார் தமிழ் பண்டிதர், பிள்ளைபாட்டு கவிஞர் மற்றும் சுவாமி விபுலானந்தர் அவர்களின் முதல் மாணவர் திரு. மாரிமுத்து பீதாம்பரம்.

பெயர்:பிரபாலினி பிரபாகரன்

பிறந்த தேதி: Jan 29

உயரம்:5'2'

கல்வி:MBA

குடியிருப்பு:ஜெர்மனி, அமெரிக்கா

Artist Image

தகப்பன் வழி வந்த இசையுடன் சேர்ந்து தமிழ் திறனும் தாய் வழி வந்த இசை ஞானமும் இன்று ஒரு சிறந்த இசை கலைஞராக உருவாக்கப்பட்டிக்கிறார். இந்த இசைத் தம்பதியின் அருமைப் புதல்வியருள் ஒருவரே பிரபாலினி பிரபாகரன். தாய் வழியிலும் தந்ைத வழியிலும் இசையுடன் தொடர்புடைய பாரம்பரியத்தைக் கொண்ட பிரபாலினி தனது நான்கு வயதிலேயே மேடையேறிப் பாடியவர்.

தன்னுடைய தாயாரிடம் முறைப்படி இசையை பயின்ற பிரபாலினி இன்று இலங்கையின் முதல் பெண் இசையமைப்பாளர் எனும் சிறப்பு பெறும் அளவிற்கு உயர்ந்துள்ளார். இவரது கணவர் பிரபாகரனை இசைகுழுவில் சந்தித்து காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரபாகரனும் ஒரு சிறந்த இசைக் கலைஞர் கூட. இவர் தபேலா, கிற்றார் போன்ற வாத்திய கருவிகளை வாசிப்பதுடன் Sound Engineer-ம் கூட.

தற்போது தன்‌ கணவர்‌ பிரபாகரன்‌, இரு குழந்தைகளுடனும்‌ அமெரிக்காவில்‌ வசிக்கும்‌ பிரபாலினி 1979-1984 காலகட்டத்தில்‌ இலங்கை முழுவதும்‌ 200-க்கும்‌ மேற்பட்ட மேடைகளில்‌ தன்னுடைய இசை நிகழ்ச்சியினை வழங்கியிருக்கிறார்‌.

ஈழத்தில் நடந்த போரினால் 1986-ல் குடும்பத்துடன்‌ ஜெர்மனி நாட்டிற்குப்‌ புலம்பெயர்ந்த பிரபாலினி 1987 முதல்‌ 1993 வரை பல்வேறு இசைக்‌ குழுக்களுடன்‌ இணைந்து ஜெர்மன்‌, நெதர்லாண்ட்ஸ்‌, டென்மார்க்‌, லண்டன்‌ ஆகிய இடங்களில்‌ 45- க்கும்‌ மேற்பட்ட மேடைகளைத்‌ தன்‌ இசைத்‌ திறத்தால்‌ அலங்கரித்தவர்‌ ஜெர்மனியின்‌ 1993-1995-ம்‌ காலத்தில்‌ 50-க்கும்‌ அதிகமான மேடைகளைக்‌ கண்டவர்‌. பிரபாலினி எழுதி மெட்டமைத்துப்‌ பாடடிய “நாங்கள்‌ இளைய கலைஞர்கள்‌” பாடலுக்கு தமிழ்‌ அருவி போட்டியில்‌ சிறந்த பாடலாசிரியர்‌ விருது பிரபாலினிக்கு கிட்டியது.

1995-ல்‌ பிரபாலினியின்‌ முதல்‌ ஆல்பமான “சங்கீத சாம்ராஜ்யம்‌” வெளிவந்தது. இதில்‌ அவரது தந்தையார்‌ ஈழத்து மெல்லிசை மன்னர்‌ எம்‌.பி. பரமேஷ்‌ மற்றும்‌ தாயார்‌ மாலினி பரமேஷ்‌ பங்கேற்றிருந்தனர்‌. பிரபாலினியின்‌ சகோதரி பிரியந்தனி இதில்‌ தனது முதல்‌ பாடலைப்‌ பாடினார்‌. இந்த “சங்கீத சாம்ராஜ்யம்‌” ஆல்பம்‌ தான்‌ பிரபாலினிக்கு இலங்கையின்‌ முதல்‌ பெண்‌ இசையமைப்பாளர்‌ என்கிற சிறப்பைப்‌ பெற்றுத்தந்தது.ஜெர்மனியின்‌ Sun Shine,Die Rockers,Berlin Tours போன்ற பல்வேறு இசைக்‌ குழுக்களில்‌ முக்கிய பாடகியாக ஆங்கிலம்‌ மற்றும்‌ ஜெர்மனி மொழிகளில்‌ 1996-1999-ம்‌ காலகட்டத்தில்‌ 150-க்கும்‌ அதிகமான மேடைகளில்‌ முழங்கினார்‌ பிரபாலினி.

கலைக்காவலர்‌ ஸ்ரீபதி 1996-ல்‌ பிராங்க்பர்ட்‌ தமிழ்ச்‌ சங்கத்தின்‌ மூலமாக பிரபாலினிக்கு வழங்கின சிறப்பானதொரு விருதுதான்‌ “ஈழத்து மெல்லிசைக்‌ குயில்‌”. 1999-ல்‌ தனது குடும்பத்தினர்‌ மற்றும்‌ நண்பர்களோடு இணைந்து சொந்தமாக ரிதம்ஸ்‌ இசைக்‌ குழுவைத்‌ துவங்கினார்‌ பிரபாலினி. நூற்றுக்கணக்கான மேடைகள்‌... பல்லாயிரம்‌ ரசிகர்கள்‌ என இந்த ஈழத்து மெல்லிசைக்‌ குயில்‌ தொட்ட சிகரங்கள்‌ சொல்லியடங்கா.

இதுவரையில்‌ பிரபல இசைக்‌ கலைஞர்கள்‌ தீபன்‌ சக்கரவர்த்தி, கங்கை அமரன்‌, மாலதி, லக்ஷ்மன்‌ சுருதி இசைக்குழு, ஸ்ரீகாந்த்‌ தேவா, க்ரிஷ்‌,ஆன்டனிதாஸ்‌, இவரின்‌ தந்தையார்‌ எம்‌.பி.பரமேஷ்‌, தயார்‌ மாலினி பரமேஷ்‌ ஆகியோருடனும்‌ தனது மேடையை இவர்‌ பகிர்ந்து கொண்ட விதம்‌ அபாரமானது.

பல நாட்டு மொழிகளில்‌ குறும்படங்களுக்கும்‌, விளம்பரப்‌ படங்களுக்கும்‌ இசையமைத்திருக்கிறார்‌. அதன்‌ மூலம்‌ தன்‌ அனுபங்களை மெருகூட்டி இன்று ஒரு முழு இசையமைப்பாளராக உருவாகி உள்ளார்‌.Sri Lanka,India,German,Swiss,Luxemburg,England,France,Denmark,Belgium,Norway,Canada மற்றும்‌ America என்று உலகம்‌ முழுவதும்‌ பறந்து பறந்து இசைக்‌ கோலமிட்டு வருபவர்‌ பிரபாலினி.

தமிழின்‌ இசைத்துறையில்‌ ஒரு பெண்‌ இசை ஆளுமை எனும்‌ வகையில்‌ இன்றைய நம்பிக்கைத்‌ தாரகையாக ஜொலிக்கும்‌ பிரபாலினி பிரபாகரன்‌ உருவாக்கியுள்ள இசை Album "QUEEN COBRA”. California வின்‌ Rythms Records-ம்‌ இணைந்து பெருமையுடன்‌ வழங்கியுள்ள சர்வதேச ஆல்பம்‌ இது.

ஆம்‌ பிரபாலினியின்‌ “குயின்‌ கோப்ரா“வுக்கு 2016-ஆம்‌ ஆண்டின்‌ இந்தியாவின்‌ மதிப்புமிக்க “ஸ்பெஷல்‌ ஜுரி” (JURY) EDITION AWARD கிட்டியிருக்கிறது. முதன்முறையாக சினிமாவுக்கு வெளியே ஒரு இசை ஆல்பம்‌ இவ்விருதினைப்‌ பெற்றிருப்பது பெருமைக்குரிய விஷயம்‌. அதுமட்டுமல்ல இவ்விருது ஒரு இலங்கை தமிழ்‌ பெண்ணுக்கு இசைக்காக இந்தியாவில்‌ கிடைத்த முதல்‌ விருதாகும்‌. தொடர்ந்து இசை பணியாற்றி வரும்‌ பிரபாலினி பிரபாகரன்‌ தற்போது திரைப்‌ படங்களுக்கும்‌ இசையமைத்து வருகிறார்‌.

விருதுகள்

ரதீ விருதுகள் "சிறப்பு சாதனை பெண்" பிரபாலினி பிரபாகரன்